ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது
தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து வேதாந்தா குழுமத்தால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் நீதிபதிகள் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையினால், சுகாதார சீர்கேடு, மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் நிறைய ஏற்படுவதாக கூறி, அப்பகுதி பொது மக்கள் போராட்டம் நடத்தினர், இதன் காரணமாக கடந்த மே மாதம் 28ம் தேதி அந்த ஆலை மூடப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடவிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆலையின் மின்சார இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது. கடைசியாக ஆலைக்குகே தமிழக அரசு சீல் வைத்தது
இதனால் வேதாந்தா நிறுவனம் எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் மனுவை தாக்கல் செய்தது. அம்மனுவில் ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக பின்பற்றுவதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் எந்த பாதிப்பும் உண்டாகவில்லை என கூறியிருந்தது. இந்த ஆலை மூடப்பட்டால் ஏராளமான ஊழியர்கள் வேலையற்றும், அவர்களது குடும்பங்கள் மிகவும் வறுமையால் வாடுவாா்கள். எனவே,ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கேட்ப்பட்டிருந்தது.

ஆலையை திடீரென மூடிவிட்டதால் குழுமத்திற்கு பல்வேறுவிதமான மிரட்டல்கள் வருவதாகவும் கூறப்படுகிறது.இந்த மனு மீதான விசாரணை இன்று இடைக்கால நீதிபதி ஜாவத் ரஹீம் தலைமையி நடந்தது. அப்போது வேதாந்தா குழுமம் சார்பில் அரிமாசுந்தரமும் அரசு தரப்பில் வைத்தியநாதனும் வாதிட்டனர். முன் எச்சரிக்கை ஏதும் இன்றி ஆலையை மூடிவிட்டனர் என அரிமா சுந்தர் வாதிட்டாா். தமிழக அரசு உள்நோக்கத்துடன் ஆலையை மூடியுள்ளது என்றார். மாசு கட்டுப்பாடு வாரியம் சோதனை நடத்திய பிறகே ஆலை மூடப்பட்டதாக வைத்தியநாதன் கூறினாா். இதையடுத்து நீதிபதி கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது. ஆலையை மூடும் தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, வருகின்ற 18 ஆம் தேதிக்குள் தமிழக அரசுபதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

0 comments: