Thursday, July 5, 2018

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கூட்டு தற்கொலை

ads
டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் அவர்களின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் கூட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட சிசிடிவி பதிவு ஒன்று இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த சிசிடிவி வீடியோ பதிவில் குடும்ப உறுப்பினர்கள் ஸ்டூல்களையும் வயர்களையும் எடுக்கும் காட்சி இருக்கிறது. இவை அவா்கள் தூக்கில் தொங்க பயன்படுத்தப்பட்டிருந்தது.




உடல்கூறாய்வு அறிக்கை 11 பேரும் தூக்கில் தொங்கியதனதலே இறந்தாக  உறுதி செய்கிறது. சிசிடிவி பதிவு அவர்கள் கொலை செய்யப்படவில்லை.

இந்த மரணத்தில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்பதால் நாடே இதனை நோக்கியுள்ளது.
இறந்தவர்களின் கண்கள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்டிருந்தன, மேலும் அவர்களது கைகள் பின்பக்கம் வைத்து கட்டப்பட்டிருந்தது. எப்படி தற்கொலை செய்வதற்கு முன்னால் இதனை அவர்களால் செய்ய முடிந்தது எனக் கேள்வி எழுகிறது.

கடந்த மூன்று மாத சிசிடிவி பதிவுகளை ஆராய ஒரு காவல்துறை அதிகாரி பிபிசி இந்தியின் சல்மான் ரவியிடம் தெரிவித்தார்.

இந்த தற்கொலைக்கு ஆன்மீக மற்றும் தாந்த்ரீக செயல்பாடுகள் காரணமாக இருக்கலாம் என்பது அவர்களது வீட்டில் எடுக்கப்பட்ட ஆதாரங்களி மூலம் தெரியவந்தது. 

இறந்த 11 பேரும் பாட்டியாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதில் 75 வயதான நாராயண் தேவி, அவரது இரண்டு மகன்கள், மருமகள்கள் மற்றும் 15- 33 வயதிலுள்ள ஐந்து பேர குழந்தைகள் ஆகியோர் அடங்குவர்.

நாராயண் தேவியின் இளைய மகனான லலித் பாட்டியாவுக்குச் சொந்தமான 11 டைரிகளை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. லலித் கடந்த 2008-ல் இறந்த தனது அப்பாவின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டதாக காவல்துறை சந்தேகிக்கின்றனர்.


இந்த குடும்பத்தினர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும், நல்ல வசதி வாய்புகளுடன் வாழ்ந்து வந்ததாக அண்டை வீட்டினர் தெரிவித்தனர்.

மூத்த பேத்தியான 33 வயதாகும் பிரியங்காவும் இறந்தவர்களில் ஒருவர்.இவருக்கு 2 வாரங்களுக்கு முன்னதாக அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது,
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 comments: