கேரளாவிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கூறப்கட்டுள்ளது. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் மூணாறில் உள்ள நீலக்குறிஞ்சி பூக்களை பார்க்க சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம், அதுபோல் மலைபாங்கான பகுதிகளுக்கும் செல்ல கேரள அரசு தடை விதித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் பெய்த தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் 100 ஆண்டுகளில் காணாத மழை ஒரே வாரத்தில் பெய்ததால் மக்கள் வீடுகளை இழந்து தவித்தனா். இதனால் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களும் நீரில் மிதந்தது.
வீடுகள் மழை மற்றும் நிலச்சரிவால் இடிந்தன. மக்கள் நிவாரண முகாம்களில் தங்கினா். நிலச்சரிவு மற்றும் மழையில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். மொத்தம் ரூ 4000 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக அரசு கூறியுள்ளது.
இந்த சூழ்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நாளையிலிருந்து மூன்று தினங்கள் தொடா்ந்து அதிகமான மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக கேரளாவின் இடுக்கி, திரிசூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நிலச்சரிவு போன்ற போிடா்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மலைப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் பினராயி விஜயன் கூறியுள்ளாா்.

0 comments: