Thursday, October 4, 2018

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை. அக்டோபா் 7 ஆம் தேதி மட்டும் 25 சென்டி மீட்டர் வரை மழை

ads
தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகின்றது. ஓாிருஇடங்களில் இடி மின்னல் தாக்கி உயிா் சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் அக்டோபா் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைதமிழகத்திற்கு பலத்த  கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்றி ஏற்பட்டதன் காரணமாக இது அடுத்த 24 மணி நேரத்தில் நாளை இது குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவெடுக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து செல்லும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தொிவித்துள்ளது.






இதுபோன்றே கேரளாவிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கூறப்கட்டுள்ளது. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் மூணாறில் உள்ள நீலக்குறிஞ்சி பூக்களை பார்க்க சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம், அதுபோல் மலைபாங்கான பகுதிகளுக்கும் செல்ல கேரள அரசு தடை விதித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் அடுத்தடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. என மேலாண்மை இயக்குனர் சத்திய கோபால் தகவல் தெரிவித்து உள்ளார். முனெச்சரிக்கை நடவடிக்கைக்கு தமிழக மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் வரும் அக்டோபா் 7 ஆம் தேதி மட்டும் 25 சென்டி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணக்கிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை உயரதிகாரிகளை அழைத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனை நடததினாா்.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 comments: