நடிகர் `பவர் ஸ்டார்' சீனிவாசன் மாயமானதாக அவரின் மனைவி சென்னை அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.கொடுத்த சில மணி நேரத்திலேயே புகார் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
`கண்ணா லட்டு திங்க ஆசையா', `கோலிசோடா' உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த பவர் ஸ்டார், மிகக்குறுகிய காலத்தில் பிரபலமாகி நடிகர் ரஜினியுடன் போட்டி என பேட்டிகளில் கூறிவரும் அவர் மீது குற்றச்சாட்டுக்களும் எழுந்தன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI4YxZOs39V2ClbSszLSL04vFI_hlGyn3VxcBTOV2AcIEaxgG0ox_ZyDagySQRN2BqG5TvASxR-s_gISah4bH31yqIlGSL7lYmH4jFQ33qJpizXIZpFjfuHhvJ4vz4ZWBA2BDwVyFVwDc/s320/power.JPG)
தமிழக, டெல்லி வழக்குகளால் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது ஆனாா். இந்த வழக்கு விசாரணை நடந்துவரும் காலகட்டத்தில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் சீனிவாசன் பங்கேற்கப்போவதாக இருந்தது. ஆனால், அவர் சில காரணங்களுக்காக பங்கேற்கமுடியாமல் போனது.
சமீபத்தில், பவர்ஸ்டார் சீனிவாசன் மீது பண மோசடி புகார் தரப்பட்டது. வழக்குகளை சட்டம் மூலமே சந்தித்துவரும் பவர் ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை என்று அவரின் மனைவி நேற்று அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாா். அண்ணா நகர் போலீஸார் பவர் ஸ்டாரை தேடினர். அப்போது அவா் ஊட்டியில் இருப்பதாகத் தகவல் தொிந்தது. இதனால் சில மணி நேரத்தில் மனைவியே புகாரை வாபஸ் பெற்றாா்.
அவேர ஊட்டியில் இருப்பதாக போனில் என்னிடம் தெரிவித்தார் என அவரது மனைவி கூறியுள்ளார்.
0 comments: